
சிம்பு - கெளதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன. இதனாலேயே இவர்கள் கூட்டணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்நிலையில் தற்போது சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவுள்ளார்.

சிம்புவின் 47வது படமாக உருவாகும் இப்படத்தை கெளதம் மேனன் இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட்டுள்ளார். கரோனா ஊரடங்கு சமயத்தில் 'விண்ணைத் தாண்டி வருவாயா 2' கதையில் இருந்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற பெயரில் ஒரு குறும்படத்தை கெளதம் மேனன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)