'டப்பிங் ஓவர்' -அதிவேகத்தில் சிம்பு!

simpu

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், 'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பல தடைகளுக்குப் பின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தலால் மீண்டும் ஷூட்டிங் தடைப்பட்டது. தற்போது தமிழக அரசு சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியதை அடுத்து, நவம்பர் மாததொடக்கத்தில், 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் அறிவித்தார்.

இதனிடையே இருக்கும் ஒரு மாத இடைவேளையில், சூசீந்திரன் இயக்கத்தில்சிம்பு நடிக்க திட்டமிட்டு, திண்டுக்கல்லில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.'ஈஸ்வரன்' என பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தின்படப்பிடிப்பு கடந்த 6 ஆம் தேதிநிறைவடைந்தது.இதனைதொடர்ந்து அப்படத்தின் டப்பிங்கையும் முடித்துள்ளார் சிம்பு. இதனைஅவர்,தனதுசமூகவலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளார். ஈஸ்வரன் படத்தின்டீஸர் வரும் தீபாவளியன்று வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்வரன் படத்தின்டப்பிங்கை முடித்த வேகத்தில்சிம்பு, மீண்டும் தொடங்க இருக்கும்மாநாடு பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள பாண்டிச்சேரி சென்றுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

maanaadu Simbu
இதையும் படியுங்கள்
Subscribe