Advertisment

"சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்" - ரஜினி குறித்து சிம்பு பட தயாரிப்பாளர் கருத்து

 Simbu filmmaker suresh kamatchi shared his opinion about Rajini

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும்சன்பிக்சர்ஸ்தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கத்தில்அனிருத்இசையமைக்கவுள்ள இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன்,ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இத்தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் உறுதிப்படுத்தி இருந்தார். ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புதொடங்கவுள்ளதாகக்கூறப்படுகிறது.

Advertisment

'தலைவர் 169' படத்திற்கு 'ஜெயிலர்'எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்சிம்புவின்'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்டிவிட்டர்பக்கத்தில், "எத்தனை குதிரைகள் ஓடினாலும், ரஜினிகாந்த், இந்தக் குதிரை விழும். சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை. சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற 3 எழுத்துமேஜிக்'ஜெயிலர்' மூலம் மீண்டும் நிகழும்"எனக்குறிப்பிட்டு நெல்சன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

suresh kamatchi Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe