Advertisment

"சினிமா மூலம் அரசியல் மாற்றங்களை நிகழ்த்தியவர்" - மணிவண்ணன் குறித்து சிம்பு பட தயாரிப்பாளர் புகழாரம்

Simbu filmmaker praises Manivannan

தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, சமூக ஆர்வலர் என பல்வேறு பரிணாமங்களில் பயணித்தவர் மறைந்த நடிகர் மணிவண்ணன். கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்து 50 படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக இவரது நையாண்டி கலந்த அரசியல் வசனங்கள் மக்கள் மனதில் மிக பிரபலம். தமிழ் திரையுலகில் 30 வருடங்களுக்கு மேலாக தன் பங்களிப்பை தந்த இவர் மண்ணை விட்டு மறைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள் ஆகிறது.

Advertisment

இந்நிலையில் மணிவண்ணனின் நினைவு தினமான இன்று (15.06.2022) ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது நினைவஞ்சலியை சமூகவலைத்தளத்தில் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் சிம்புவின் 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டர் பக்கத்தில், " சினிமாவின் மூலம் அரசியல் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என நிரூபித்தவர். புலிக்கொடி போர்த்தி உறக்கம் கண்டவரை எப்போதும் மறவோம். நினைவஞ்சலிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

suresh kamatchi manivannan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe