ஒரே மாதத்தில் ஷூட்டிங்கை முடித்த சிம்பு... டீஸர் அப்டேட்!

SIMBU

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், 'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பல தடைகளுக்குப் பின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தலால் மீண்டும் ஷூட்டிங் தடைப்பட்டது. தற்போது தமிழக அரசு சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியதை அடுத்து, நவம்பர் மாதத் தொடக்கத்தில், 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் அறிவித்தார்.

இதனிடையே இருக்கும் ஒரு மாத இடைவேளையில், சூசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டு, திண்டுக்கல்லில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இன்று படத்தின்படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஈஸ்வரன் எனப் பெயரிடப்பட்டிருக்கும், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக,சிம்புதனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, போஸ்டர்ஒன்றைப் பதிவிட்டுள்ள அவர், "இந்த அழகானபயணத்திற்காக ஈஸ்வரன் படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் எனதுநெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனதுரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

சிம்புவெளியிட்டுள்ளபோஸ்டரில் படத்தின்டீஸர்தீபாவளி அன்று வெளியாகும்எனவும்படம் பொங்கல் பண்டிகைக்குவெளியாகும்எனவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

Simbu suresh kamatchi
இதையும் படியுங்கள்
Subscribe