simbu devan next with yogi babu

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்துவருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்டிராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0c6c37c6-cf1e-44fb-a404-106362704944" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-x-300_8.jpg" />

Advertisment

மேலும் ரஜினியின் 'ஜெயிலர்' படத்திலும், விஜய்யுடன் 'வாரிசு' படத்திலும் நடித்து வருகிறார். அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இது போக ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கும் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி அதில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் நகைச்சுவை கதையம்சம் கொண்ட சரித்திரப் படமாக இருக்கும் எனவும் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படம் போன்று இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்பு சில காரணங்களால் படம் நின்று போனது குறிப்பிடத்தக்கது.