vdgsagbsdgbvs

Advertisment

நடிகர் சிம்பு தனக்கு ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்யும் முனைப்புடன் உடல் இளைத்து, முழு வேகத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கரோனா காலத்திற்குள்ளேயே 'ஈஸ்வரன்' படத்தை முடித்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு'; 'சில்லுனு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல'; கெளதம் மேனன் இயக்கத்தில் 'நதிகளிலே நீராடும் சூரியன்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முகத்தை க்ளீன் ஷேவ் செய்த தோற்றத்தில் இருக்கும் அவர், தன் வீட்டில் மஷ்ரூம் பன்னீர் சமைக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வைரலாகிவருகிறது. சிம்பு சென்ற வருடம் இதேபோல் விடிவி கணேஷ் மற்றும் தனது குடும்பத்தாருக்காக சமைத்த வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.