Advertisment

மணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம்பு புலம்பல்  

sim

சிம்பு நடிப்பில் வெளிவந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் கடந்த வருடம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படம் தோல்வி அடைந்ததற்கு சிம்பு தான் காரணம் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் குற்றம்சாட்டினார்கள். பின்னர் நீண்ட நாட்கள் கழித்து, கடந்த வாரம் சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் போனில் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து வரும் வேளையில் இப்பிரச்சனை குறித்து விளக்கம் அளித்து பேசுகையில்...."நடிகர் சங்கத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு ஒரு நடிகனாக எனது பதிலை நடிகர் சங்கத்துக்கு தெரிவித்துவிட்டேன். இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையை நடிகர் சங்கம் எடுக்கலாம். ஆனால் அதை செய்யாமல் மணிரத்னம் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, தினமும் போன் செய்து தொல்லை கொடுக்கிறார்கள். சிம்புவை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று படத் தயாரிப்பாளருக்கு இடைஞ்சல் கொடுக்கிறார்கள். இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் உடன் பேசி அவர்களிடம் விளக்கிவிட்டேன். படம் ரிலீசாகி ஆறு மாதத்திற்கு பிறகு என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். அது யாருடைய தூண்டுதலின் பேரில் செய்தார்கள் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது தனிப்பட்ட பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதனை நடிகர் சங்கத்தில் தான் முறையிட வேண்டும். எனது பதிலை நான் நடிகர் சங்கத்திடம் தெரிவித்துவிட்டேன். தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் பிரகாஷ்ராஜிடமும் இதுகுறித்து நான் விளக்கிவிட்டேன்" என்றார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe