Simbu celebrate the success maanaadu film

Advertisment

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது.இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="86e743be-0d04-41a2-ad2d-5ec9f9a47c64" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_67.jpg" />

இந்நிலையில், ‘மாநாடு’ படத்தின் வெற்றியை நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.