Advertisment

“பையன் சிம்பு ஃபேன்னா, தைரியமா லவ் பண்ணுங்க”- பெண்களுக்கு சிம்பு அட்வைஸ்

இரண்டு வருட போராட்டங்களுக்கு பின்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நடிகர் சிம்புவும் இணைந்து மாநாடு பட ஷூட்டிங்கை தொடங்கியுள்ளனர். இந்த படம் அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு பிரச்சனைகள் போய்க்கொண்டிருந்தது. இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு வேறு ஒரு நடிகரிடம் கதை சொல்லி, வேறு ஒரு படத்தை எடுக்கவே திட்டமிட்டுவிட்டார் என்று தகவல் வெளியானது. அதன்பின் இவர்கள் மூவரும் இணைந்து படத்தை தொடங்கிவிட்டனர். விரைவில் ஷூட்டிங் முடிக்கப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

simbu latest speech

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் நடிகர் சிம்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “சிம்பு பெண்களைத் திட்டுகிறார் என்று சொன்னார்கள். ஆனால், அந்தப் பெண்கள்தான் என் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். நான் என் அப்பாவுடன் சண்டைபோடாமல் அம்மாவுடன் சண்டை போடுவேன். ஏனென்றால் எனக்கு என் அம்மாவைதான் ரொம்ப பிடிக்கும். அதேதான் பிடித்தவர்கள் மீதுதானே கோபத்தை காட்ட முடியும். நான் உங்களிடம் கோபித்துக்கொள்ள கூடாதா? அதே சமயத்தில் பெண்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் முதலில் குரல் கொடுப்பதும் நான்தான். அவர்களுக்குப் பிரச்சினை தருபவர்களை சும்மா விடமாட்டேன்.

Advertisment

அப்படியே நம்ப பசங்களை பற்றி கொஞ்சம் பேசுவோம், பெண்கள் சிம்பு ஃபேன் என்றால் தைரியமாக கண்ண முடிக்கொண்டு காதலியுங்கள். ஊரே ஒருவனை கழுவி ஊத்தும்போதும், இவன் காலி என்று சொல்லியபோதும் அவனை விட்டு போகாமல் துணையாக நின்றவர்கள். நாளைக்கு எப்படி கட்டிய பெண்ணையும், காதலித்த பெண்ணையும் விட்டுட்டு போவார்கள்” என்று கூறினார்.

maanadu Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe