Advertisment

"கல்யாணம் கல்யாணம்னு டார்ச்சர் பண்ணாதீங்க" - பெற்றோருக்கு சிம்பு அட்வைஸ்  

Simbu dvice parents

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாகசித்தி இட்னானி நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனையொட்டி நேற்று(2.9.2022) இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வெந்து தணிந்தது காடு படக்குழுவினருடன் கமல்ஹாசன், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய சிம்பு,“இந்த படம் மாஸ் கிளாஸ் என்று சொல்லமாட்டேன். படத்தில் மாஸ் உள்ளது. ஆனால் அத்துடன் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தான். அது எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் பார்த்து விட்டு சொல்ல வேண்டும். ரசிகர்கள் நீங்கள் பெருமைப்படும் அளவிற்கு இனிமேல் படம் பண்ணுவேன். பசங்களை கல்யாணம் கல்யாணம் என டார்ச்சர்பண்ணாதீங்க. அவர்கள் அவரது வாழ்க்கையைவாழட்டும். சமூகத்தின் அழுத்தத்தால் சில தப்பான கல்யாணம் நடக்கிறது. மேலே ஒருத்தர்இருக்கிறார். அவர் சரியான ஒருத்தரைஉங்களுக்காக அனுப்பி வைப்பார். ரசிகர்கள் பெற்றோர்களை கைவிட்டுவிடாதீர்கள்" எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

actor simbu gautham menon Vendhu Thanindhathu Kaadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe