Published on 17/08/2018 | Edited on 19/08/2018

நடிகர் சிம்பு நடிப்பில் 'செக்கச் சிவந்த வானம்' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்தாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை முடித்தவுடன் சிம்பு அடுத்து யார் படத்தில் நடிப்பார் என்று பரவலாக எதிர்பார்த்திருந்த நிலையில் சிம்பு அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'அட்டரின்டிகி தரேதி' படத்தின் ரீமேக்காக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.