Published on 26/06/2018 | Edited on 26/06/2018

மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' படத்தை வெற்றிகரமாக முடித்துள்ள சிம்பு தற்போது 90 எம்.எல் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதையடுத்து சிம்பு விரைவில் 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சிம்பு, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி மூன்று பேரும் சந்தித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு, சிம்பு கூட்டணியில் பில்லா 3 படம் விரைவில் உருவாகவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது.