Advertisment

“ஏற்க முடியாத இழப்பு..”- சிம்பு இரங்கல்...

simbu str

Advertisment

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் கடந்த 28ஆம் தேதி மாலை மறைந்தார். நேற்று பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்ட அவரது உடல், இன்று அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு பெற்றோர் சமாதிக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. இதனிடையே நேற்று இரவு நடிகர் சிம்பு மறைந்த எம்.பி. வசந்தகுமார் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக்கொள்ள வேண்டும் தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும்.

விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் எனத் தொடங்கி வைத்தவர்.

கன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தைக் கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர்.

குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக் கொண்டவர்.

சூட்ட நிறைய புகழாரங்கள் உண்டு. ஆனால், இவ்வளவு விரைவில் அவரை இழப்போம் என எண்ணியதே இல்லை.

Advertisment

ஏற்க முடியாத இழப்பு இது. மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள விஜய் வசந்த் மற்றும் வினோத் குமார் இருவரும் தோள் சாய்ந்துகொள்ள தோழனாக நான் நிற்பேன்.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரை இழந்து வாடும் குடும்பம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், தொகுதி மக்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe