Advertisment

திருமணம் குறித்து சிம்பு தரப்பு விளக்கம்

simbu abou marriage

Advertisment

கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியானஇப்படத்தின்முதல் பாட்டு 'நம்ம சத்தம்' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது பாடலை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கான ப்ரோமோ ஷூட்டிங் அண்மையில் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதில் ஏ.ஆர் ரஹ்மான், அவரது மகன் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் மார்ச்மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே கடந்த சில தினங்களாக இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை விரைவில் சிம்பு மணமுடிக்கவுள்ளதாகவும் இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டது எனவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சிம்புவின் தரப்பு இந்த தகவலுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளது. இந்த திருமணத்தகவலில் எந்தவித உண்மையும்இல்லை எனவும் அப்படி ஒருவேளை திருமணம் குறித்த தகவல் உறுதியானால் முதலில் ஊடகங்களில் தான் வெளியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

marriage actor simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe