style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட, தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது விழாவில் சிம்பு பேசும்போது.... "இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது. என் முதல் காதலி என் ரசிகர்கள்தான்" என்றார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});