
'AAA' படத்தின் பிரச்சனைக்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக சிம்பு படப்பிடிப்புகளில் சரியாக கலந்துகொள்வதில்லை எனவும், காலையில் படப்பிடிப்பு என்றால் மாலையில் தான் வருவார் என்றும், மேலும் திடீர் என்று படப்பிடிப்பை ரத்து செய்வார் என்றும் சிம்புவை பல பேர் குறை சொன்ன நிலையில் தற்போது அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்கு சீக்கிரமாகவே வந்துவிடுகிறாராம். காலையில் ஆறு மணிக்கு படப்பிடிப்பு என்றால் சிம்பு ஐந்து மணிக்கே வந்து உட்கார்ந்துவிடுகிறார் என்கிறது படதரப்பு. மேலும் சமீபத்தில் நடந்த எழுமின் பட விழாவில் சிம்பு பேசும் போது... "இனி படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வரமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்களும் இந்த தகவலால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.