/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/112_35.jpg)
கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகிவரவேற்பை பெற்றநிலையில் வருகிற 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இப்படம் முடிந்தவுடன் ஏ.ஆர். முருகதாஸ், மிஷ்கின் உள்ளிட்ட இயக்குநர்களுடன் சிம்பு கூட்டணி வைக்கவுள்ளதாகப் பேசப்பட்டது. ஆனால் அண்மையில் சிம்புவின்அடுத்த படத்தை'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மூலம் கவனம் ஈர்த்த தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தை கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் சிம்புவின் 48வது படமாக உருவாகிறது. இதற்கான அறிவிப்பு வீடியோவை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில்,"கனவுகள் நனவாகும்" எனப் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில், "சினிமாதலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! @SilambarasanTR_@desingh_dp#STR48#BLOODandBATTLE#RKFI56_STR48#Mahendran@RKFI@turmericmediaTM@magizhmandrampic.twitter.com/nIcmVjrBHk
— Kamal Haasan (@ikamalhaasan) March 9, 2023
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)