Advertisment

"பாதிக்கப்பட்டவர்களை தைரியமாக குரல் கொடுக்க தூண்டும்"-  சில்லுக்கருப்பட்டி இயக்குனர் 

halitha

Advertisment

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில்,நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இணைந்து தயாரித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரைலர்அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

நாளை இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தைபிரத்யேகமாக அமேசானில் பிரபலங்களுக்கு வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். இதைபார்த்த பிரபலங்கள் படம் குறித்துசமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

இந்நிலையில் 'சில்லுக்கருப்பட்டி' இயக்குனர் ஹலிதாஇப்படம் குறித்து கூறுகையில், "ஆன்லைன் ப்ரிமியர் ஷோவில் படத்தை பார்த்துவிட்டேன். எமோஷனலாக கட்டிப்போடும் கோர்ட் டிராமா.ஜோதிகா மேடம் அவர்களின் நடிப்பு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கிறது. இது மிகவும் முக்கியமான படம். பாதிக்கப்பட்டவர்களைதைரியமாக குரல் கொடுக்க தூண்டும். அருமையான படைப்பு. இயக்குனர் பெட்ரிக் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe