Advertisment

சில்க் ஸ்மிதாவை போன்ற அழகான கண்களுடைய ஒரு பெண்ணை தேடுகிறோம்... -இயக்குனர்

silk smitha

Advertisment

80-களிலும் 90-களிலும் தென்னிந்திய திரைப்படங்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாகவும் நடன கலைஞராகவும் இருந்தவர் சில்க் ஸ்மிதா. படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனமாடுகிறார், குறைந்த அளவிலே அவருக்கான கதாபாத்திரம் என்றாலும் அவருக்காகவே சினிமா பார்க்க வந்தவர்கள் பலர் உள்ளனர். இதனால் இயக்குனர்களாலும், தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்தார்.

சில்க் ஸ்மிதா என்றழைக்கப்படும் விஜயலட்சுமி வறுமை காரணமாகவும், கனவுகளை சாத்தியப்படுத்தவும் தன்னந்தனியாளாக வீட்டை விட்டு வெளியேறி பல சிரமங்களுக்கு பின் சினிமாவில் கோலோச்சினார். ஆனாலும், அவருடைய வாழ்க்கை ஒரு மிகப்பெரிய போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும், அதனை அவர் வெளியுலகத்திற்கு காட்டியதாக தெரியவில்லை. சினிமாவில் வெற்றிநடை போட்டுகொண்டிருந்த சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையும், அவர் சந்தித்த போராட்டங்களையும் அடிப்படையாக வைத்து ‘அவள் அப்படித்தான்’ என்கிற தலைப்பில் திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும்,முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர். பல விளம்பரப் படங்களை இயக்கியவரும், “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்த படத்தை இயக்குகிறார்.

Advertisment

"சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடையஒரு அழகான பெண்ணை இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் இப்படத்தின் இயக்குனரான மணிகண்டன். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.

silksmitha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe