/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/162_6.jpg)
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய அமித்ஷா, "அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்த கருத்தும் கூட பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழால் இணைவோம் என்று பதிவிட்டுள்ளார். இவரை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழால் இணைவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சிம்பு உள்ளிட்ட திரைபிரபலன்கள் தமிழுக்காக களத்தில் இறங்கியுள்ளதாக அவர்களின் டீவீட்டை ரீட்வீட் செய்து வருகின்றனர்.
தமிழால் இணைவோம் #TamilConnects
— Silambarasan TR (@SilambarasanTR_) April 12, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)