Advertisment

கையில் துப்பாக்கியுடன் சிம்பு... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

silambarasan starring vendhu thaninthathu kaadu movie update out now

Advertisment

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துவருகிறார்.இவர்கள்கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதுரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e475750a-6a90-4707-84f5-6136ece82355" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_6.jpg" />

முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கிய படக்குழு, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பைமும்பையில் நடத்திவருகிறது. இதனிடையே, நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றசிம்பு, தற்போது மீண்டும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இத்தகவலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன்பகிர்ந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் கெத்தாக இருக்கும் அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

Advertisment

gautham menon actor simbu Vendhu Thanindhathu Kaadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe