'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் அப்டேட்... உற்சாகத்தில் ரசிகர்கள்

silambarasan starring vendhu thaninthathu kaadu movie teaser update

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துவருகிறார்.இவர்கள்கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதுரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கிய படக்குழு, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பைமும்பையில் நடத்திவருகிறது. சமீபத்தில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6705abcc-10fa-47f2-8fe4-0dc115457f08" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_51.jpg" />

இந்நிலையில், படத்தின் டீசர் குறித்ததகவல் வெளியாகியுள்ளதுஅதன்படி, 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசரைப் படக்குழு அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. 'மாநாடு'படத்தால்உற்சாகமடைந்த ரசிகர்கள், தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசரையும் கொண்டாட தயாராகிவருகின்றனர்.

actor simbu gautham menon Vendhu Thanindhathu Kaadu
இதையும் படியுங்கள்
Subscribe