silambarasan sing song ram pothineni film

Advertisment

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் 'தி வாரியர்' படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வரும் படக்குழு, இப்படம் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "புல்லட்..." என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். படக்குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலை கேட்ட தி வாரியார் பட நாயகன் ராம் பொத்தினேனி, "நீங்கள் ஒரு அற்புதமான பாடகர். இப்பாடலை அடுத்த கட்டத்துக்குகொண்டு சென்றுவிட்டீர்கள். உங்களுக்கு என் நன்றி" எனக் கூறியுள்ளார்.