இணையத்தில் வைரலாகும் சிம்பு பாடிய 'புல்லட்' பாடல்

 silambarasan sing Bullet Song release now

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் 'தி வாரியார்' படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வரும் படக்குழு, இப்படம் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இடம்பெற்றுள்ள புல்லட் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை நடிகர் சிம்புபடக்குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பாடியுள்ளார். இவருடன் தமிழில் ஹரிப்பிரியா பாடியுள்ளார். விவேக் வரிகளில் தேவி ஸ்ரீ பிரசாத் வரிகளில் வெளியாகியுள்ள இப்பாடல் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

actor simbu directorlingusamy silambarasan
இதையும் படியுங்கள்
Subscribe