Advertisment

மாறன் படத்திற்காக தனுஷுடன் இணையும் சிம்பு?

silambarasan releasing trailer maaran movie

இயக்குநர்கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்உள்ளிட்ட பலர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன்இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'மாறன்' படத்தின் ட்ரைலரைநடிகர் சிலம்பரசன் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே படம் வெளியாகவுள்ள ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் 'மாறன்' படத்தின் ட்ரைலரை யார் வெளியிட உள்ளார்என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா எனட்விட்டரில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு சில ரசிகர்கள் நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைத்து வெளியிடவுள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட சினிமா வட்டாரங்களும் இதனையே கூறி வருகின்றன. இருப்பினும் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

silambarasan maaran movie actor dhanush actor simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe