Advertisment

மீண்டும் ஏ.ஜி.ஆராக மாறும் எஸ்.டி.ஆர்... வெளியான புதிய அறிவிப்பு

simbu PathuThala shoot resume May27

கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கும்'பத்து தல' படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌதம்கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்டூடியோக்ரீன்ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

Advertisment

'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு கலந்துகொண்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளதால் தற்போது 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பத்து தல படத்தின் படப்பிடிப்பு மே27 ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறியுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் க்ளிம்பஸ்வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Vendhu Thanindhathu Kaadu pathu thala actor simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe