Silambarasan arrived at VTKAudioLaunch along with ikamalhaasan

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாகசித்தி இட்னானி நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதனையொட்டி இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டுவிழா வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. இதில் ஏ.ஆர் ரஹ்மான், ஸ்ரேயாகோஷல் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காகநடிகர் சிம்பு வந்துள்ளார். சிம்பு முதலில் இசை வெளியீட்டு விழாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் வருவதாக கூறப்பட்டு, அதற்கான பணிகளும் செய்யப்பட்டு வந்தது. ஆனால் சிம்பு ஹெலிக்காப்டரில் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. சிம்பு வரும் அதே நேரத்தில் விழா நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்று வந்திறங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisment