“மச்சி இவனுங்கெல்லாம் இப்படித்தான்” - ஜெயம் ரவியிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு 

silambarasan apologies jayam ravi ponniyin selvan movie

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததுள்ளது. இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருண்மொழி வருமனாகஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக சிம்பு நடிக்க இருந்ததாகவும், ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று ஜெயம் ரவி சொன்னதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற 'பொன்னியின் செல்வன்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நிருபர் ஒருவர் ஜெயம் ரவியிடம் இது குறித்து கேள்வி எழுப்புகையில், “இதெல்லாம் பொய், முதல்ல நான் சொன்னால்கேட்கிறஆளா மணி சார். அவரேஎனக்கு ஒரு ரோல் கொடுத்து இருக்காரு, அதை நான் போய் பண்ணப் போறேன். இதுலநான் சொன்னால்எப்படி மணி சார் கேட்பாரு. இரண்டாவது, இந்த மாதிரி செய்தி பரவிய உடனே சிம்பு எனக்கு போன் பண்ணாரு, ‘மச்சி நான் இந்த படத்துல இருக்கேன்னா சந்தோஷப்படுகிற முதல் ஆள் நீதான், அதனால யாராவது ஏதாவது சொல்லி இருந்தால் சாரி. இவனுங்கெல்லாம்இப்படித்தான் ஃப்ரீயா விடு'ன்னு சொன்னாரு” என பதிலளித்தார்.

actor simbu jayam ravi maniratnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Subscribe