/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/89_19.jpg)
சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து தன்னுடைய ஆக்டிங் கேரியரைத் தொடங்கிய சித்தார்த் சுக்லா, 2014ஆம் ஆண்டு வெளியான ‘ஹம்டி ஷர்மா கி துனியா’ என்ற படம் மூலம் பாலிவுட் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 13ஆவது சீசனுக்கான டைட்டிலை வென்றதையடுத்து, மிகவும் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து, படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் சித்தார்த் சுக்லா பிஸியாக நடித்துவந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சித்தார்த் சுக்லாவை அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.
40 வயதே நிரம்பிய சித்தார்த் சுக்லாவின் திடீர் மரணம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)