sidharth miss you movie release update

Advertisment

தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இப்படத்தில் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திலிருந்து முன்னதாக ‘நீ என்ன பார்த்தியா’ மற்றும் ‘சொன்னாரு நைனா’ பாடல்கள் வெளியாகிய நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

உலகமெங்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்கு டி சீரிஸ் பெற்றுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசாம் ப்ரைம் நிறுவனம் பெற்றுள்ளது.