sidharth combo

நடிகர் சித்தார்த்தும், ஜி.வி. பிரகாஷும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்று செய்தி பரவி இருந்தது. தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு ‘ சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை பிச்சைக்காரன் பட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் சசி இயக்குகிறார். மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் இந்த படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடிக்கிறார். சித்தார்த் முதல் முறையாக டிராஃபிக் போலீஸாகவும், ஜி.வி பைக் ரேசராகவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்து குமார் முதன் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பிரஸன்னா எஸ் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரமேஷ் பி பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார்.