Skip to main content

சித்தார்த்தை இயக்கும் ராம்!.

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராம். இவர் கடைசியாக இயக்கிய பேரன்பு படம் உலகம் முழுக்க பல திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டுக்களை பெற்றது. இதனையடுத்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 

sidharth

 

 

இதனையடுத்து இயக்குனர் ராம் யாருடன் இணைந்து படம் இயக்க போகிறார் என்று அவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் சித்தார்த்தை வைத்து தன்னுடைய ஐந்தாவது படத்தை இயக்க ராம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சித்தார்த்தும், ராமும் ஏற்கனவே நல்ல நெறுங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும். 
 

தற்போது நடிகர் சித்தார்த்-ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. சசி இயக்கியிருக்கும் இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதைபோல அருவம் என்ற பேய் படமும் ரிலீஸுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

கற்றது தமிழ் படம் வெளியான பின் அந்த படத்தை பார்த்த நடிகர் சித்தார்த், ராமிற்கு தானாக போன் செய்து எனக்கு எதாவது கதை பண்ணுங்க என்று கூறியதாக முன்பு ஒருமுறை இயக்குனர் ராம் கூறியிருந்தார். அதன்பின் நாங்கள் ஒன்றாக இணைந்து படம் நடிக்கவில்லை என்றாலும் நெறுங்கிய நண்பர்களாகிவிட்டோம் என்று ராம் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யுவன் - மதன் கார்க்கி கூட்டணியில் வெளியாகும் காதல் பாடல்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Yezhu Kadal Yezhu Malai first single release update

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார்.

இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘மறுபடி நீ...’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளதாகப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடல் காதல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பிரியாணி, அஞ்சான், வை ராஜா வை, மாநாடு உள்ளிட்ட சில படங்களில் யுவன் இசையில் மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார்.  

Next Story

“பாய்ச்சலைத் தொடங்கியிருக்கிறது” - மாரி செல்வராஜ் மகிழ்ச்சி

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
mari selvaraj about ram Yezhu Kadal Yezhu Malai

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது. 

இதற்காக நெதர்லாந்து சென்று விழாவில் கலந்து கொண்டது படக்குழு. அப்போது கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என இயக்குநர் ராம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரோட்டர்டாம் விழாவில் படத்திற்கு பார்வையாளர்கள் பாராட்டு தெரிவிக்கும் வீடியோவை படக்குழுவினர் சேர்ந்த பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அந்த வகையில் அஞ்சலி பகிர்ந்த அந்த வீடியோவை, இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இயக்குநரின் அடுத்த படைப்பான ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் அதிகமான பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு தன் பாய்ச்சலை தொடங்கியிருக்கிறது” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ராமிடம் உதவி இயக்குநராக மாரி செல்வராஜ் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.