
தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் சித்தார்த். மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பல வருடங்களாக தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சித்தார்த் தற்போது 7 வருடங்களுக்குப் பின் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'ஆர்.எக்ஸ்.100' இயக்குனர் அஜய் பூபதி இயக்கவுள்ள புதிய படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சித்தார்த்.
'மஹா சமுத்திரம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளது.
Follow Us