Advertisment

'வாழ்க்கை ஒரு வட்டம் என்று இப்படம் சொல்கிறது'- சித்தார்த் கலகல பேச்சு

வருகிற 19ஆம் தேதி உலகம் முழுவதும் ‘தி லயன் கிங்’ படம் வெளியாகிறது. லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படமாக வெளியாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. ஹிந்தி மொழியில் ஷாருக்கானும், அவரது மகனும் டப்பிங் பேசுகிறார்கள். அதுபோல தமிழிலும் முன்னணி நடிகர்களான சித்தார்த், அரவிந்த்சாமி, சிங்கம்புலி, ரோபோ சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்கள் டப்பிங் பேசுகிறார்கள்.

Advertisment

sidharth

இந்நிலையில், இந்த படத்தின் புரோமோஷனுக்காக வைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் சித்தார்த், அரவிந்த்சாமி, சிங்கம் புலி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் சித்தார்த்திடம், ‘முதலில் சிம்பா ஒரு அழகிய குட்டியாக வரும், பின்னர் பல்வேறு சவால்களை கடந்து காட்டின் ராஜாவாக மாறும் இதுபோல அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு டிரான்ஸிஸன் நடக்கும், உங்களுடைய வாழ்க்கையில் அப்படி எதை சொல்வீர்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

Advertisment

அதற்கு பதிலளித்த சித்தார்த், “என் வாழ்க்கையில் தற்போதுவரை முதல் பாதிதான் நடக்கிறது. எனக்கு எவ்வளவு வயதானாலும் என்னை ஒரு சிறு பையனை போலதான் பார்க்கிறார்கள். ஆனால், இந்த படத்தில் வரும் முக்கியமான கருத்து என்ன என்று பார்த்தால் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுதான். அதை மிக அருமையாக சொல்லியிருப்பார்கள். இதை ஒரு கார்டூன் படமாக பார்த்தபோது கூட இந்த கருத்துக்கள் எல்லாம் ஆழமாக பதிந்தது. இதே கதையை நான் நியூயார்க் நகரில் நாடக மேடையில் பார்த்தேன். அதுவே உங்களை ஸ்தம்பித்து போகிற அளவிற்கு இம்பிரஸ் செய்யும்” என்று கூறினார்.

the lion king
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe