Advertisment

மலையாளம், தமிழில் உருவாகியுள்ள திரில்லர் படம் 'ஷித்தி'!

hfhrhde

Advertisment

குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும், மனதோடும் நடக்கும் சம்பவங்கள் விறுவிறுப்பான வகையில் படமாக்கப்பட்டுள்ளது'ஷித்தி' திரைப்படத்தில். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் மலையாள சினிமாவில் இயக்குனரும், ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திய கால்பந்தாட்ட வீரர் ஐ.எம் விஜயன் போலீஸ் அதிகாரியாகவும், அக்க்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ் மற்றும் தனுஜா கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை சூர்யா ஃபிலிம் புரொடக்சன் சார்பாக மகேஸ்வரன் நந்தகோபால் தயாரிக்கிறார்.

பயஸ் ராஜ் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சுற்றுலாத்தலமான கோவளம் மற்றும், திருவனந்தபுரம் மற்றும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. ஆழ் கடலிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு ரமேஷ் நாராயண் இசை அமைக்கிறார். படத்தின் இசை வெளியீடு தற்போது கொச்சினில் நடைபெற்றது.

siddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe