Advertisment

சித்தி இட்னானிக்கு ரசிகர்கள் பாராட்டு

siddhi idnani meets old age home peoples

Advertisment

திரைத்துறையில் குஜராத்தி மொழி படத்தின் மூலம் அறிமுகமான சித்தி இட்னானி பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து ஆர்யாவின் 34வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை முத்தையா இயக்க ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'நூறு கோடி வானவில்' படத்தில்நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை சித்தி இட்னானி சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்றுள்ளதாகத்தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அங்கு இருப்பவர்களைச் சந்தித்து அவர்களுக்குத்தேவையான உணவுகளை வழங்கி பேசி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த சித்தி இட்னானி, "தூய்மையான அன்பின் வெளிப்பாடு" எனக் குறிப்பிட்டுள்ளார். சித்தி இட்னானியின் இந்தச் செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள்குவிந்த வண்ணம் உள்ளன.

Siddhi Idnani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe