Advertisment

"ரஜினி சார் ஃபோனில் அழைத்தார்" - சித்தார்த் நெகிழ்ச்சி

siddharth shared  rajini willing to watch chiththa

அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. கடந்த மாதம் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் கமல், மணிரத்னம், சிம்பு, ஹலிதாஷமீம் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் பாராட்டினர்.

Advertisment

சினிமா விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.தொடர் பாசிட்டிவ் விமர்சனத்தால் தமிழ்நாட்டில் நிறைய திரையரங்குகளில் திரை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'சின்னா' நாளை (06.10. 2023) வெளியாகிறது.

Advertisment

இந்த நிலையில், படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா படக்குழு நடத்தியது. இதில்கலந்து கொண்டு பேசிய சித்தார்த் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்தார். அதன் ஒரு பகுதியில், "தினமும் ஒரு புது பரிசு கிடைப்பது போல் இருக்கிறது. இன்று காலையில் ரஜினி சார் ஃபோனில் அழைத்தார். படத்தை பற்றி கேள்விப்பட்டேன். நல்லாவந்திருப்பதாக சொல்கிறார்கள். வீட்டிற்கு திரும்பியவுடன் பார்க்கவுள்ளதாக சொன்னார். அது எனக்கு எவ்ளோ பெரிய விஷயம். என் படத்தை பற்றி அவருக்கு தெரிஞ்சிருக்கு. அவர் கேள்விப்பட்டு பார்க்க வேண்டும் என ஆசைப்படுவது உண்மையிலே நடக்குமா என யோசித்தோம். அப்படி யோசித்த விஷயங்களை இந்த படம் அசால்டாக நடத்திக் கொடுத்தது" என்றார்.

Actor Rajinikanth siddharth
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe