Skip to main content

'வெட்கக்கேடு.. முட்டாள்தனம்.. பெண்வெறுப்பு.. சீமானை வறுத்தெடுத்த சித்தார்த்!  

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
siddharth

 

#MeToo விவகாரம் கொஞ்சம் கொஞ்சமா விஸ்வரூபம் எடுத்துட்டு இருக்கு. பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மேல தொடர்ந்து புகார்கள் தெரிவிச்சுட்டு இருக்காங்க. பல தரப்புல இருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துட்டு இருக்கு. இத பத்தி பேசியிருந்த சீமான் வைரமுத்துக்கு ஆதரவா சில கருத்துக்கள் தெரிவிச்சுருந்தாரு. இந்த வீடியோவ தன்னோட ட்விட்டர் பக்கத்துல பகிர்ந்து சீமான ரொம்ப காட்டமா விமர்சிச்சுருக்காரு நடிகர் சித்தார்த்.

 

 


 
‘சின்மயி முன்னாடி இத பத்தி பேசிருக்கனும்... தன்னோட கல்யாணத்துல வைரமுத்து கூட சிரிச்சுட்டு இருந்தாங்கன்னுலாம் சீமான் சொல்லிருக்காரு. அன்புள்ள சீமான், தன்னோட சொந்த அப்பா, மாமனார்களால வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் பல வருடமா வேற வழியில்லாம, அவங்க கூட பொது இடங்கள்ல சிரிச்சுட்டு இருந்துருக்காங்க. காரணம் ஆண்கள் அவங்க மேல செலுத்துற அதிகாரம்.  இது புரியல? வெக்கக்கேடு’. ‘இந்த மீடூ க்கு பின்னால் பி.ஜே.பி இருக்குன்னும் சீமான் சொல்லிருக்காரு. மீடூ வே ஒரு கண்கட்டு வித்தைனும் சொல்லிருக்காரு. நம்ம அரசியல்ல எல்லா பக்கத்துலயும் சிறுபுத்தி உள்ளவங்களும் வெறுப்புணர்வை விதைக்கறவங்களும் இருக்காங்கன்றது எனக்கு இப்ப புரியுது. சீமானோட இந்த கருத்துக்கள நான் ரொம்ப வன்மையா கண்டிக்கறேன். ஆதிக்க மனோபாவம் நிறைஞ்ச, மரியாதையற்ற, பெண்களை இழிவாக எண்ணும் முட்டாள்தனம் இது’  னு சித்தார்த் சீமான பயங்கரமா விமர்சிச்சுருக்காரு. நாளுக்கு நாள் இந்த மீடூ வோட வேகம் அதிகரிச்சுட்டே இருக்கு. என்ன ஆகப்போகுது, எத்தன பேர் இந்த சுழல்ல சிக்கப் போறாங்கன்னு பொறுத்துருந்து பாக்கலாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்