/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/269_19.jpg)
8 தோட்டாக்கள் பட இயக்குநர் ஸ்ரீ கனேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘3 பி.ஹெச்.கே’(3BHK). இப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் பட தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்து வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கடந்த பிப்ரவரியில் வெளியானது. டைட்டில் டீசர் பார்க்கையில் ஒரு நடுத்தர வீட்டில் அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சி ஆகிய குடும்பத்தினர் இருக்கும் நிலையில் அந்த வீட்டில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை வைத்து காதல், காமெடி கலந்த ஒரு ஃபீல் குட் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது.
இப்படம் இந்தாண்டு கோடையில் வெளியாகவுள்ளதாக டைட்டில் டீசரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் படி தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஜூலை 4ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை எஸ்.பி.சுப்பையா என்பவர் பெற்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)