siddharth new movie announcement

‘சித்தா’ பட வெற்றியைத் தொடர்ந்து சித்தார்த், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனோடு இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்தியன் 2 படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்து, சித்தார்த் ‘மிஸ் யூ’ படத்தில் நடித்துள்ளார். மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வெளிவரவிருக்கிறது.

Advertisment

இந்த நிலையில், சித்தார்த் தனது 40வது படத்தை அறிவித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கனேஷ் இப்படத்தை இயக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது. அதன்படி, இப்படத்தில் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.