Advertisment

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநருடன் கைகோர்த்த சித்தார்த்

Siddharth joins hands with Vijay Sethupathi's director

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை', 'அருவம்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இந்த படத்தை 'பண்ணையாரும் பத்மினியும்' , 'சேதுபதி', 'சிந்துபாத்' படங்களை இயக்கிய அருண் குமார் இயக்குகிறார்.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்தான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

sidharth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe