/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/107_43.jpg)
'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வரும் படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024 பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.
இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்திற்கு உலகளவில் பல நாடுகளில் மற்றும் திரை எண்ணிக்கையில் அதிகளவு வெளியாகும் திரைப்படம் அயலான் என படக்குழு தெரிவித்தது. பின்பு இப்படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது படத்தில் வரும் ஏலியன் கதாப்பாத்திரத்திற்கு டப்பிங் பேசிய நபர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரபல நடிகர் சித்தார்த் தான் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் அயலான் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி எனவும் ரசிகர்கள் நிச்சயம் சித்தார்த் குரலை ரசிப்பார்கள் எனவும் கூறியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)