Advertisment

கர்நாடகாவில் எதிர்ப்பு - பாதியிலேயே வெளியேறிய சித்தார்த்

Siddharth, Forced To Leave Press Conference by Kannada Rakshna Vedike members

அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பெங்களூரு சென்றுள்ளார் சித்தார்த். அங்கு ஒரு திரையரங்கில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த நிலையில், கன்னட ரக்‌ஷண வேதிகே அமைப்பைச்சேர்ந்த சிலர் உள்ளே வந்து நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தும்படி கூச்சலிட்டனர். மேலும் காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சிறிது நேரம் கழித்து அங்கே அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பாதியிலே வெளியேறிவிட்டார் சித்தார்த்.

Advertisment

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்துவிட்டது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

cauvery karnataka siddharth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe