Advertisment

மேடையில் கண்கலங்கிய சித்தார்த்

49

சித்தார்த் நடிப்பில்  '8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ இயக்கத்தில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘3 பிஹெச்கே’(3 BHK). இப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். 

Advertisment

இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் படக்குழுவினருடன் ரவி மோகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். அந்த வகையில் சித்தார்த் பேசுகையில், “சினிமாவுக்கு வந்த பிறகு இது எனது நாற்பதாவது படம். நாற்பது படம் நடித்து விட்டாயா என எனது அப்பா ஆச்சரியமாகக் கேட்டபோது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தும் தயாரிப்பும் எனக்கு தாய் தந்தை. நான் நடித்த நாற்பது படங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன்” என்றார். அப்போது எமோஷ்னலாக கண்கலங்கிய படியே பேசினார். 

Advertisment

தொடர்ந்து பேசிய அவர், “நாற்பதாவது படத்தை என்னை நம்பிக் கொடுத்த ஸ்ரீ, அருணுக்கு நன்றி. இந்தப் படம் இன்னும் ஸ்பெஷலாக அமைய காரணம் சரத் சார் மற்றும் தேவயாணி மேம். தேவயாணி, மீதா, சைத்ரா இந்த மூன்று கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனம், பொறுப்புதான் பிரபுவையும் வாசுதேவனையும் நகர்த்தி செல்லும். சின்ன வயதில் இருந்து சொந்த வீட்டில்தான்  இருந்தேன். எனது மனைவிக்காகதான் சமீபத்தில் வீடு வாங்கினேன். இந்தப் படத்தில் நடித்தபோதே வீடு வாங்கியது நல்ல சகுனம். பிடிவாதம் கொண்ட தனக்கு என்ன வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் வளர்ந்த குழந்தைதான் ஸ்ரீகணேஷ். அம்ரித் இசையில் இன்னும் பெரிய உயரம் அடைவார். மீதா, சைத்ரா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். என் வீட்டில் ரவியும் இன்னொரு மகன் தான். படம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

siddharth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe