siddharth calrifies on his marrige news to aditi rao

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே காற்று வெளியிடை மூலமாக அறிமுகமாகி செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் வெளிப்படையாக காதலை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், இருவரும் நேற்று தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் சித்தார்த் - அதிதி ராவ் தரப்பு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.

Advertisment

siddharth calrifies on his marrige news to aditi rao

இந்த நிலையில்சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதிதி ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “அவள் ஒப்புக்கொண்டாள். நிச்சயதார்த்தம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் இருவருக்கும் நிச்சயம் முடிக்கப்பட்ட நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தார்த், 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2007ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதிதி ராவும் சத்யதீப் மிஸ்ரா என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment