style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'அவள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'சைத்தான் க பச்சா' படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் அடுத்ததாக டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவிந்திரன் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை கேத்தரின் தெரசா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சதிஷ், கபீர் சிங், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் தமன் இசையமைக்க, ஒளிப்பதிவை ஏகாம்பரம் கவனிக்கவுள்ளார். புதுமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கும் இப்படம் பூஜையுடன் இன்று சென்னையில் துவங்கியது. பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">