Advertisment

"இது தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய முயற்சியாக இருக்கும்" - சித்தார்த்

Siddharth  about Chithha  movie

Advertisment

அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சித்தா'. இப்படத்தை சித்தார்த்தே அவரது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்க திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகிய நிலையில் வருகிற 28ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சித்தா படம் குறித்து சித்தார்த் கூறுகையில், "இந்தப் படத்தை நாங்கள் ஒரு கிட்நாப் திரில்லராக உருவாக்கி இருக்கிறோம். இது மற்ற படங்களைப் போல் வெறும் எமோஷனல் படமாக மட்டும் இல்லாமல் ஒரு ரேசி திரில்லராகவும் இருக்கும். அதேபோல் இந்த படத்தை அதிக விளம்பரப்படுத்தி பெரிதாக மக்களிடம் எடுத்துச் செல்லாமல் முன்பு அந்த காலகட்டத்தில் இருந்தது போல் படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் வாய் வழியாக இப்படத்தைபிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்.

இனி வரும் நாட்களில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். இந்தப் படத்தில் ஒவ்வொருவராக தனிப்பட்ட முறையில் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் அனைவருக்கும் ஒர்க் ஷாப் செய்யப்பட்டு அதன் மூலம் அனைவரும் ஒன்று கூடி ஒரு காம்போவாக இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் படி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய முயற்சியாக இருக்கும். அதேபோல் இதுவரை நீங்கள் பார்த்த சித்தார்த்தை விட இந்த படத்தில் ஒரு புதிய சித்தார்த்தை பார்ப்பீர்கள். அந்த அளவுக்கு மிகவும் ஒரு லைவான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்.

Advertisment

இந்த படத்தை ஒரு சவுத் பேன் இந்தியன் படமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உள்ள டாப் டிஸ்ட்ரிபியூட்டர்கள் இப்படத்தை வெளியிடுகின்றனர். இது ஒரு மகளுக்கும் சித்தப்பாவுக்குமான பாச பிணைப்பை கொண்ட படமாக இருக்கும். அதேபோல் எனக்குமான ரொமான்ஸ் இந்த படத்தில் இருக்கும். ஒரு துப்புரவு தொழிலாளர்களுக்குள் இருக்கும் காதலை அழகாக கூறியிருக்கிறோம். இந்த படம் உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்" என்றார்.

siddharth
இதையும் படியுங்கள்
Subscribe