Advertisment

போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகர் கைது; அதிர்ச்சியில் திரையுலகம்! 

Siddhanth Kapoor arrested drugs case Bengaluru

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவரின் சகோதரரும், நடிகருமான சித்தாந்த்கபூர் நேற்றுபெங்களூருவில் உள்ள ஒரு தனியார்நடைபெற்ற இரவுப் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறி நடிகர் சித்தாந்த்கபூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடன் சேர்த்து அந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறி மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

சமீபத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்பு நிரபராதி என்று கூறி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் பாலிவுட்டை கடந்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் மீண்டும் போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட் பிரபலம்சிக்கியுள்ளது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

BOLLYWOOD ACTORS Bengaluru arrested
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe