
எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா, சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் ‘சித்தா’. இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் விமர்சகர்களாலும் பாரட்டப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.